திண்டிவனம் அருகே 65 வயது மூதாட்டி மர்ம மரணம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 65 வயது மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள அவனிப்பூர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 65). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு குடிப்பழக்கம் இருந்ததாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று மல்லிகாவும் சீர்காழி அருகே சிறுநகர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (35) என்பவரும் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். இன்று காலை மல்லிகா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து திண்டிவனம் ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்பிற்கான காரணம் குறித்து பார்த்திபனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com