செல்போன் மூலம் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த 5 பேர் கைது

செல்போன் மூலம் லாட்டரி டிக்கெட்களை விற்பனை செய்வதாக பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
செல்போன் மூலம் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த 5 பேர் கைது
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தெற்கு தெரு, மாரியம்மன் கோவில் அருகே சிலர் செல்போன் மூலம் லாட்டரி டிக்கெட்களை விற்பனை செய்வதாக பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு செல்போன் மூலம் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து கொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த சதாசிவம் (வயது 25), முருகப்பெருமாள்(26), பொன்னர் (27), மதி என்கிற மகேந்திரபிரசாத் (24) தங்கபாண்டி (26) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் இருந்து ரூ.8,300, 4 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com