ரெயிலில் அடிபட்டு 2 தொழிலாளர்கள் பலி

மணி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் அடிபட்டு 2 தொழிலாளர்கள் பலி
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அடுத்த வடமதுரை கொல்லம்பட்டியை சேர்ந்த அழகுமலை என்பவரது மகன் மணி (வயது23). டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான மணி நேற்று இரவு கொல்லம்பட்டி பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

அதேபோல் திண்டுக்கல் அருகே செல்லமந்தாடியைச் சேர்ந்த பிச்சைமணி என்பவரது மகன் மணிமாறன் (33). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். குடிபழக்கத்துக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்று விட்டார். நேற்று இரவு மதுபோதையில் அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கேசவன், தனிப்படை காவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடம் சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com