மேட்டுப்பாளையத்தில் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

சம்பந்தப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தால் அவமானமாகி விடுமே என்று கருதிய மாணவர் தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். மாணவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
Published on

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று வீட்டின் அருகே உள்ள ஒரு பொதுக்கழிப்பிடத்துக்கு பெண் ஒருவர் சென்றார். இதை நோட்டமிட்ட அந்த மாணவர், பெண்ணுக்கு தெரியாமல் அவரை செல்போனில் வீடியோ எடுத்தார்.

இதனை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மாணவரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் எச்சரித்து மாணவரை அனுப்பி வைத்தனர். செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து சிக்கிக் கொண்டதால் மாணவர் வேதனை அடைந்தார்.

சம்பந்தப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தால் அவமானமாகி விடுமே என்று கருதிய அவர் அந்த பகுதியில் தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com