

ராமேசுவரம்:
பாக்ஜலசந்தி, தலை மன்னார் கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்த காற்றின் தாக்கமாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய கடலோர பகுதியில் கடல் அலை வீசி வருகிறது.
இந்தப்பகுதி கடலில் சில இடங்களில் அவ்வப்போது கடல் உள்வாங்கிய சூழ்நிலை ஏற்படுகிறது. இன்று பாம்பன் வடக்கு கடல் பகுதியில் அதிகாலையில் ஏறத்தாழ 200 மீட்டர் நீளத்தில் கடல் உள்வாங்கியது. இதனால் அந்தப்பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.
மேலும் நீர் மட்டம் குறைவால் மீன்பிடி படகுகளை மீட்க முடியாமல் உள்ளனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லமுடியாமல் தவித்தனர். இன்று மாலையில் கடல் நீர் மட்டம் உயர்ந்த பிறகு அந்த படகுகளை மீட்டு மீன்பிடிக்கச் செல்ல வாய்ப்புள்ளது.