என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி.
சித்தி புத்தி விநாயகர் கோவிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா
- பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது
- நாளை காலை சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூர் ஸ்ரீ சித்தி புத்தி தெட்சிணாமூர்த்தி விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தி பிரமோற்சவத்தை முன்னிட்டு ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை சென்னையை சேர்ந்த பிரபல பரத நாட்டிய கலைஞர், முனைவர் அர்ச்சனா நாராயணமூர்த்தி அவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சுவாமி சித்தி, புத்தி விநாயகர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
நாளை 15 ந்தேதி காலை 9 மணியளவில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை மெலட்டூர் எஸ்.குமார் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
Next Story






