search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவாமிமலை புளியஞ்சேரியில் பொது மக்கள் திடீர் சாலை மறியல்
    X

    சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    சுவாமிமலை புளியஞ்சேரியில் பொது மக்கள் திடீர் சாலை மறியல்

    • பெண்கள், வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்தை அடைகின்றனர்.
    • பாதையை மாற்றி அமைக்க பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே புளியஞ்சேரியில் மிகவும் பழமையான புராதான சாலையாக காலம் காலமாக கல்லணை பூம்புகார் சாலை அமைந்துள்ளது. பயன்பாட்டில் இருந்த அந்த சாலை தற்போது தேசிய நெடுஞ்சாலை பாதையாக மாற்றி அமைத்து வருகிறார்கள்.

    இந்தப் பாதையில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள், அவசரகால சிகிச்சைக்கு செல்பவர்கள், பேருந்துகள் என தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் ஆறுபடையில் நான்காம் படை வீடான சுவாமிமலை கோவிலுக்கு செல்பவர்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். தற்பொழுது தேசிய நெடுஞ்சாலை ஆக மாற்றி அமைப்பதால் இவ்வழியில் அனைவரும் மாற்று வழியில் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு சுற்றி செல்வதால் முக்கியமாக இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளை நடைபெறுகிறது.

    இதனால் பெண்களும், வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்தை அடைகின்றனர். எனவே இந்த பாதையை மாற்றி அமைக்க வேண்டியும் தேசிய நெடுஞ்சாலை துறைக்கும், தமிழக அரசுக்கும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று காலை கல்லணை- பூம்புகார் சாலையில் புளியஞ்சேரி சத்தியாகாலனி அருகில் 200 க்கும் மேற்பட்பட்ட பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கும்பகோணம் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜாபர் சித்திக் மற்றும் இன்ஸ்பெக்டர்கள்.

    சுவாமிமலை சிவ செந்தில்குமார், கும்பகோண கிழக்குஆய்வாளர் அழகே சன் மற்றும் கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேசன் வருவாய் ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் சாலை மறியல் போ ராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் அமைதி பேச்சு வார்த்தை கோட்டாட்சியர் தலைமையில் ஏற்பாடு செய்வதாகவும் உடனே புறவழிச்சாலை அமைக்க ப்பட்டுள்ள இடங்களில் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தருவதாகவும் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்ப ட்டது இந்த சாலை மறியல் போரா ட்ட த்தால் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    Next Story
    ×