என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கடையநல்லூரில் ஒர்க் ஷாப்பில் திடீர் தீ விபத்து- கார், டிராக்டர் எரிந்து நாசம்
  X

  தீ கொளுந்துவிட்டு எரிந்ததையும், டிராக்டர் முழுமையாக எரிந்து கிடப்பதையும் படத்தில் காணலாம்.


  கடையநல்லூரில் ஒர்க் ஷாப்பில் 'திடீர்' தீ விபத்து- கார், டிராக்டர் எரிந்து நாசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடையநல்லூர் ரஹ்மானியபுரத்தை சேர்ந்த சுலைமான் அட்டை குளம் நெடுஞ்சாலை பகுதியில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.
  • தீ விபத்தில் டிராக்டர் . கார் ஆகியவை முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. அருகில் நின்ற லாரியின் பிற்பகுதி முழுமையாக எரிந்தது.

  கடையநல்லூர்:

  கடையநல்லூர் ரஹ்மானியபுரம் 9-வது தெருவை சேர்ந்தவர் சுலைமான். இவர் கடையநல்லூர் அட்டை குளம் நெடுஞ்சாலை பகுதியில் நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார் .

  அதன் பின்னர் இரவு காலை 11 மணிக்கு ஒர்க் ஷாப்பில் இருந்து அதிகமான புகைமூட்டத்துடன் தீ பற்றி எரிந்தது. கார், டிராக்டர் டீசல் டேங்க் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது .

  இதனைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் மேற்பார்வையில் கடையநல்லூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ஜெயராம் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  மேலும் செங்கோட்டை யில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு துரிதமாக தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள பெட்ரோல் பல்க் மற்ற வேலைக்கு வந்த புதிய டிராக்டர்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

  தீ விபத்தில் டிராக்டர் . கார் ஆகியவை முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. அருகில் நின்ற லாரியின் பிற்பகுதி முழுமையாக எரிந்தது. விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது கார் பேட்டரி ஷாட் மூலம் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×