ரெயில்வே சுரங்கப்பாதையில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

தாம்பரம் ரெயில்வே சுரங்கப் பாதையில் சென்ற இளம்பெண் ஒருவரை பின்தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டார்.இளம்பெண் தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
ரெயில்வே சுரங்கப்பாதையில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
Published on

தாம்பரம்:

தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சீனிவாஸ் நாயக் (32).

இவர் நேற்று இரவு தாம்பரம் ரெயில்வே சுரங்கப் பாதையில் சென்ற இளம்பெண் ஒருவரை பின்தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதனை கண்டித்த அவ்வழியாக வந்த வாலிபர்களையும் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் நாயக் தாக்கியதாக தெரிகிறது. இதில் ஒரு வாலிபரின் கை விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த இளம்பெண் தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த இளம்பெண்ணின் கணவர் மற்றும் நண்பர்கள் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் நாயக்கை மடக்கி பிடித்தனர்.

அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை தாம்பரம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்பெக்டர் சீனிவாஸ் நாயக்கை சஸ்பெண்டு செய்து ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் ராஜையா உத்தரவிட்டார்.

ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் நாயக் இதுபோல் பல பெண்களிடம் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com