என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை - தொழிலாளர்  துறை எச்சரிக்கை
    X

    கோப்புபடம். 

    குழந்தைகளை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை - தொழிலாளர் துறை எச்சரிக்கை

    • 14 முதல், 18 வயது வரையுள்ள வளரினம் பருவத்தினரை, அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்.
    • குற்ற செயலின் அடிப்படையில், இருவேறு தண்டனையும் வழங்கப்படலாம்.

    திருப்பூர்:

    குழந்தைகள் மற்றும் வளரினம் பருவத்தினர் பணியமர்த்தப்படுவதை தடுக்கும் நோக்கில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் 12-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, குழந்தை தொழிலாளர் முறை விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அரசுத்துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன் அமைப்பு, மரியாலயா தொண்டு நிறுவனம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் பங்கேற்று, உறுதிமொழி ஏற்றனர்.

    மாவட்டத்தில்குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவது தொடர்பான, விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி, துண்டு பிரசுரம் வினியோகம், விழிப்புணர்வு பதாகை வைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.குழந்தை மற்றும் வளரினம் பருவ தொழிலாளர் சட்டப்படி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எவ்வகையிலும் பணியில் அமர்த்தக்கூடாது. மேலும், 14 முதல், 18 வயது வரையுள்ள வளரினம் பருவத்தினரை, அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்.குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, 20 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    குற்ற செயலின் அடிப்படையில், இருவேறு தண்டனையும் வழங்கப்படலாம்.மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவ னங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும், அபாயகரமான தொழிலில், 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரையும் பணிகளில் அமர்த்த வேண்டாம் எனதொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.

    Next Story
    ×