search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் பள்ளி மாணவிகளுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுபட பயிற்சி
    X

    மாணவிகளுக்கு மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பயிற்சி அளிக்கப்பட்டது.

    கொடைக்கானலில் பள்ளி மாணவிகளுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுபட பயிற்சி

    • கொடைக்கானலில் மாணவிகளுக்கு தற்கொலை செய்யும் எண்ணங்களிலிருந்து விடுபடவும், மன அழுத்த ங்களில் இருந்து பாதுகாக்க வும் பயிற்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
    • கொடைக்கானல் நீதிபதி தலைமை தாங்கி மாணவிகளுடன் கலந்துரையாடி பயிற்சிகளை வழங்கினார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வட்ட சட்டப் பணிகள் அமைப்பின் சார்பில் கொடைக்கானல் செயின்ட் ஜான்ஸ் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி மாணவிகளுக்கு தற்கொலை செய்யும் எண்ணங்களிலிருந்து விடுபடவும், மன அழுத்த ங்களில் இருந்து பாதுகாக்க வும் பயிற்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    கொடைக்கானல் நீதிபதி கார்த்திக் தலைமை தாங்கி மாணவிகள் தற்கொலை எண்ணம், மன அழுத்தத்திலி ருந்து விடுபட பல்வேறு உதாரணங்களை மேற்கோள் காட்டி பயிற்சிகள் வழங்கினார். நீதிமன்றம் மாணவிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் பேசினார்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். டாக்டர் மார்க்கண் பாலாஜி மாணவிகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள், அதற்கான காரணங்கள், மருத்துவ ரீதியில் இவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் பேசினார்.

    கொடைக்கானல் வக்கீல்கள், ஆசிரியர்கள், செயின்ட் ஜான்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லூர்து மேரி, நீதிமன்ற பணி யாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 200-க்கும் அதிகமான மாணவிகள் கலந்து கொண்டுபயிற்சி பெற்றனர்.

    Next Story
    ×