என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகை பறிப்பில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள் பயன்படுத்திய திருட்டு மோட்டார் சைக்கிள்: உரியவரை கண்டறிந்த போலீசார்
- அப்போது அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிள், பழனிச்சாமியுடையது என போலீசாருக்கு தெரியவந்தது.
- 2 மாதமாக தேடி வருவதும் போலீசாருக்கு ெதரியவந்தது.
கடலூர்:
கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 வாலிபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டபோது, கடலூர் புதுநகர் போலீசார் பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிள், பழனிச்சாமியுடையது என போலீசாருக்கு தெரியவந்தது. இவர் கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் காணாமல் போன தனது மோட்டார் சைக்கிளை 2 மாதமாக தேடி வருவதும் போலீசாருக்கு ெதரியவந்தது.
இந்த நிலையில் பழனிச்சாமி தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை பழனிச்சாமியிடம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






