விழுப்புரம் நகராட்சி சார்பில் அதிநவீன கழிவுநீர் அகற்றும் வாகனம்

கழிவுநீர் அகற்றுவதற்கான கட்டணமாக ரூ.800 நிர்ணயம் செய்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரசீதுடன் விண்ணப்பம் செய்து பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதிக நவீன வசதியுடன் கூடிய  கழிவுநீீர் அகற்றும் வாகனம்.
அதிக நவீன வசதியுடன் கூடிய கழிவுநீீர் அகற்றும் வாகனம்.
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் நகராட்சி கமிஷனர் சுரேந்திர ஷா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-ெசனனை நகராட்சி நிர்வாக இயக்குநர் செயல்முறையின்படி 15-வது மத்திய நிதிக்குழு மான்யம் 2021-22-ல் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சிக்கு 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் வாகனம் வாங்குவதற்கு நிர்வாக அனுமதி பெற்று கழிவுநீர் வாகனம்  வாங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தை பொதுமக்களின் உபயோகத்திற்குகொண்டு வருவதற்காக ஒருமுறை கழிவுநீர் அகற்றுவதற்கான கட்டணமாக ரூ.800 நிர்ணயம் செய்து நகர் மன்ற தீர்மான எண்.53, நாள்.11.4.2023-ல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் உபயோகத்திற்கு 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்நகராட்சி கழிவுநீர் வாகனத்தின் மூலம் ஒருமுறை கழிவுநீர் அகற்றுவதற்கு கட்டணமாக ரூ.800 நகராட்சி கருவூலத்தில் செலுத்தி அதற்கான ரசீதுடன் விண்ணப்பம் செய்து பொதுமக்கள் தங்கள் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியின் கழிவுநீரினை நகராட்சி கழிவுநீர் வாகனத்தின் மூலம் அகற்றி பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com