மாணவ, மாணவியருக்கு ஆன்மீக பயிற்சி முகாம்

குமாரபாளையம் வேதாந்த மடத்தில் மாணவ, மாணவியருக்கு ஆன்மீக பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில் பயிற்சியாளர்கள் மூலம் மாணவ மாணவியருக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சி முகாம் நடந்தபோது எடுத்த படம்.
பயிற்சி முகாம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் வேதாந்த மடத்தில் மாணவ, மாணவியருக்கு ஆன்மீக பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் மடாதிபதி சுவாமி சித்ருபானந்தா தலைமை வகித்தார். இதில் பயிற்சியாளர்கள் மூலம் மாணவ மாணவியருக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டது. புராண கதைகள், இந்து மதத்தின் சிறப்பம்சங்கள், எடுத்துரைத்ததுடன், ஸ்லோகங்கள் கற்றுக்கொ டுக்கப்பட்டு, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்கள் மற்றும் பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டுகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பள்ளி பாளையம் தர்மரட்சனா சமிதி அமைப்பை சேர்ந்த பொறுப்பாளர் தனவேல் பங்கேற்று பேசினார். இதில் நிர்வாகிகள் தலைவர் ரங்கநாதன், பொருளர் சண்முகம், அழகரசன், விஸ்வநாதன், முருகேசன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com