கோட்டை காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோட்டை காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
Published on

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே உள்ள திருநாட்டியத்தான்குடியில் கோட்டை காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com