search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    • தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது
    • நாகர்கோவில்-தாம்பரம் இடையே மாலை 4.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் ஏப்ரல் 12-ந் தேதி இயக்கப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது

    * தாம்பரம்-நெல்லை (வண்டி எண்:06031) இடையே இரவு 10.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் ஏப்ரல் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கமாக, நெல்லை-தாம்பரம் (06032) இடையே மாலை 5.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஏப்ரல் 5-ந் தேதி (புதன்கிழமை) இயக்கப்படுகிறது.

    * தாம்பரம்-நாகர்கோவில் (06037) இடையே மாலை 4.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் ஏப்ரல் 6-ந் தேதி (வியாழக்கிழமை) இயக்கப்படுகிறது.

    * நாகர்கோவில்-சென்னை எழும்பூர் (06038) இடையே காலை 11.55 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் ஏப்ரல் 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இயக்கப்படுகிறது.

    * நாகர்கோவில்-தாம்பரம் (06020) இடையே மாலை 4.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் ஏப்ரல் 12-ந் தேதி (புதன்கிழமை) இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கமாக, தாம்பரம்-நாகர்கோவில் (06019) இடையே மாலை 4.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் ஏப்ரல் 13-ந் தேதி (வியாழக்கிழமை) இயக்கப்படுகிறது.

    * எர்ணாகுளம்-எழும்பூர் (06046) இடையே இரவு 11.20 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் ஏப்ரல் 9 மற்றும் 16-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, எழும்பூர்-எர்ணாகுளம் (06045) இடையே மதியம் 2.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஏப்ரல் 10 மற்றும் 17-ந் தேதிகளில் (திங்கட்கிழமை) இயக்கப்படுகிறது.

    * நாகர்கோவில்-தாம்பரம் (06012) இடையே மாலை 4.35 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் 9 மற்றும் 16-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, தாம்பரம்-நாகர்கோவில் இடையே காலை 8.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் 10 மற்றும் 17-ந் தேதிகளில் (திங்கட்கிழமை) இயக்கப்படுகிறது.

    * திருவனந்தபுரம் சென்டிரல்-எழும்பூர் (06044) இடையே இரவு 7.40 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் 5 மற்றும் 12-ந் தேதிகளில் (புதன்கிழமை) இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, எழும்பூர்- திருவனந்தபுரம் சென்டிரல் (06043) இடையே மதியம் 2.25 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் ஏப்ரல் 6 மற்றும் 13-ந் தேதிகளில் (வியாழக்கிழமை) இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×