மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி தெற்கு கள்ளிகுளம் மாதா கோவிலில் சிறப்பு பிரார்த்தனை

சிறப்பு பிரார்த்தனையில், உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பனிமாதா பேராலயத்தில் பங்கு தந்தை ஜெரால்டு எஸ். ரவி தலைமையில் பங்கு மக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
மாதா கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடந்த போது எடுத்த படம்.
மாதா கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடந்த போது எடுத்த படம்.
Published on

வள்ளியூர்:

மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அம்மாநிலத்தில் அமைதி திருப்ப வேண்டியும் நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அப்போது உயிரிழந்த வர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அம்மாநிலத்தில் அமைதி ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை நிலைக்கு திரும்பவேண்டும் என பனிமாதா பேராலயத்தில் பங்கு தந்தை ஜெரால்டு எஸ். ரவி தலைமையில் பங்கு மக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

குறிப்பாக 53 மணி ஜெபமாலை ஏறெடுக்கப்பட்டது. இந்த பிரார்த்தனையில் உதவி பங்கு தந்தை வளன்அரசு, தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com