என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூஜையில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சிறப்பு பூஜை
- புற்றுக்கோவிலில் தைப் பொங்கல் சிறப்புப் பூஜை நடைபெற்றது.
- பூஜையில் அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் தைப் பொங்கல் சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோடிசக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story






