search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் 553 தாய்மார்களுக்கு சிறப்பு உணவு பெட்டகங்கள்
    X

    பயனாளிக்கு சத்தான உணவு பெட்டகத்தை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனி மாவட்டத்தில் 553 தாய்மார்களுக்கு சிறப்பு உணவு பெட்டகங்கள்

    • தேனி மாவட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் மூலம் 1116 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலம் சிறப்பு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    • 553 தாய்மார்களுக்கு சிறப்பு உணவு பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் முன்னோடி திட்டமான ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் மூலம் அரைத்த வேர்கடலை, பால்பவுடர், எண்ணெய், சர்க்கரை, வைட்டமின்கள் மற்றும் மினரல் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்ட த்தில் ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர், கம்பம், தேனி , மயிலாடும்பாறை, பெரிய குளம், உத்தம பாளையம் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 1116 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலம் சிறப்பு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது. பேரிச்சம்பழம் 1 கிலோ, நெய், அமினோஅமிலம், வைட்டமின்திரவம், புரோட்டின் பவுடர், குடற்புழு நீக்க மாத்திரை ஆகிய பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் ஆண்டிபட்டியில் 49, போடி யில் 84, சின்னமனூரில் 61, கம்பத்தில் 75, மயிலாடு ம்பாறையில் 70, பெரிய குளத்தில் 89, தேனியில் 62, உத்தமபாளையத்தில் 63 என மொத்தம் 553 தாய்மார்களுக்கு சிறப்பு உணவு பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின்மூலம் பயனடைந்த கோகிலா புரத்தை சேர்ந்த இலக்கியா என்பவர் தெரிவிக்கையில், விவசாய கூலிவேலை பார்த்துவரும் எனது கணவருக்கு போதிய வருவாய் இல்லாததால் கஷ்டமான சூழ்நிலையில் இருந்துவருகிறோம். எனது மகன் பிறக்கும்போது எடைகுறைவாக இருந்தான். இதனைதொடர்ந்து எங்கள் பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் அங்கன்வாடி மைய த்தில் உணவு பெட்டகம் வழங்கப்பட்டது. இதன்மூ லம் எனக்கு நல்ல சக்தி கிடைத்துள்ளது என்றார்.

    தேனி அல்லிநகரம் நகராட்சியை சேர்ந்த அம்பிகா தெரிவிக்கையில், எனது மகன் பிறக்கும்போதே எடை குறைவாக இருந்தான். இதனால் டாக்டர்கள் பரிசோதனை செய்து தமிழக அரசு மூலம் வழங்கும் சிறப்பு உணவினை 36 நாட்களுக்கு வழங்கினர். தற்போது எனது மகனும், நானும் ஆரோக்கியமாக உள்ளோம். ஏழை மக்களின் நலன் கருதி தமிழகஅரசு செயல்படுத்தும் இதுபோன்ற திட்டங்கள் மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது என்றார்.

    Next Story
    ×