search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: பொதுமக்கள்  அரசு பஸ்கள் மூலமாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்-  கலெக்டர் கார்த்திகேயன் தகவல்
    X

    கலெக்டர் கார்த்திகேயன்

    சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: பொதுமக்கள் அரசு பஸ்கள் மூலமாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்- கலெக்டர் கார்த்திகேயன் தகவல்

    • ஆடி அமாவாசை திருவிழாவிற்காக இன்று மாலை வரை தனியார் வாகனங்களில் குடில் அமைக்கும் பொருட்கள் எடுத்து செல்லலாம்.
    • தனியார் வாகனங்கள் இன்று மாலைக்கு பிறகு, நாளை முதலும் கட்டாயம் அனுமதிக்கப்படாது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அனுமதி நீட்டிப்பு

    சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று மாலை வரை மட்டும் தனியார் வாகனங்களில் பொது மக்கள் குடில் அமைக்கும் பொருட்கள் எடுத்து செல்வதற்கு அனுமதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    எக்காரணம் கொண்டும் இன்று மாலைக்கு பிறகும், நாளை (திங்கட்கிழமை) முதல் தனியார் வாகனங்கள் கட்டாயம் அனுமதிக்கப் படாது. பொதுமக்கள் அனைவரும் அகஸ்தியர் பட்டி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் மூலமாக மட்டுமே செல்ல அனுமதிக்கப் படுவார்கள். பொதுமக்கள் அனைவரும் அரசு துறை களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×