கொடைக்கானலில் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதி.மழையளவு குறைந்து கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
கொடைக்கானலில் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழையும் கடும் பனிமூட்டமும் நிலவி வந்தது. இந்த சூழலை பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் இன்று காலையில் சிறிது நேரம் பனிமூட்டம் நிலவியது. அதனைத் தொடர்ந்து பகல் பொழுதிலும் பனிமூட்டம் நீடித்தது. இதனால் நகர் முழுவதும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

இதனால் இருசக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

நடந்து செல்பவர்கள் மீதும் பனி விழுவதால் உடல் நடுங்கியபடி செல்கின்றனர். தொடர்ந்து பனிமூட்டம் குறையாமல் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com