search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரத்தில் விதை எடுப்புக்காக பூத்துக்குலுங்கும் சின்ன வெங்காய பயிர்கள்
    X

    ஒட்டன்சத்திரத்தில் பூத்துக்குலுங்கும் வெங்காய பயிர்களை படத்தில் காணலாம்.

    ஒட்டன்சத்திரத்தில் விதை எடுப்புக்காக பூத்துக்குலுங்கும் சின்ன வெங்காய பயிர்கள்

    • ஒட்டன்சத்திரம் பகுதியில் தண்ணீர் அதிகமாக உள்ள கிராமப்பகுதிகளில் சின்ன வெங்காயம் விதை உற்பத்தி வெகுவாக நடைபெற்று வருகிறது.
    • ஒரு ஏக்கருக்கு சின்ன வெங்காய பூக்களில் இருந்து எடுக்கப்படும் விதைகள் 1½ கிலோ போதுமானது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் சின்ன வெங்காயம் விதைகளாகவும், நாற்றுகளாகவும் நடவு செய்து வருகின்றனர்.

    இதில் விதைகளை கொண்டு சாகுபடி செய்யும் சின்ன வெங்காயம் அதிக அளவு மகசூல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதில் ஒட்டன்சத்திரம் பகுதியில் தண்ணீர் அதிகமாக உள்ள கிராமப்பகுதிகளில் சின்ன வெங்காயம் விதை உற்பத்தி வெகுவாக நடைபெற்று வருகிறது. ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிட 500 கிலோ வரை விதை வெங்காயம் வாங்க வேண்டும்.

    1 கிலோ விதை வெங்காயம் ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் அறுவடை செய்து 45 நாட்கள் ஆன வெங்காயத்தை மட்டுமே பயிரிட முடியும். இம்முறையில் பயிரிட்டால் செலவு மிகவும் அதிகமாகும். அதே சமயம் ஒரு ஏக்கருக்கு சின்ன வெங்காய பூக்களில் இருந்து எடுக்கப்படும் விதைகள் 1½ கிலோ போதுமானது. இந்த விதை ஒரு கிலோ ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    விதையை கொண்டு நடவு செய்து சாகுபடி செய்வதற்கு செலவு குறைவு என்பதால் பெரும்பாலான விவசாயிகள் பூமியிலிருந்து எடுக்கப்படும் வெங்காய விதைகளை வாங்கி பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தற்போது விதைக்காக பயிரிட்டுள்ள சின்னவெங்காய பூக்கள் பூத்துக்குலுங்கி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Next Story
    ×