என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரியகருப்பன்
சிவகங்கை மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம்
- திருப்பத்தூரில் நாளை சிவகங்கை மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
- இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாரும், அமைச்சருமான பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூரில் நாளை (3-ந் தேதி) சிவகங்கை மாவட்ட தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் கணேசன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கல், சேர்த்தல் தொடர்பான பணிகள், கழக வளர்ச்சி பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






