சர்வதேச பள்ளி விளையாட்டு விழா

காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சர்வதேச பள்ளி விளையாட்டு விழா
Published on

காரைக்குடி

காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் சர்வதேசப் பள்ளியில் 12-ம் ஆண்டு தடகளப்போட்டிகள் மற்றும் விளையாட்டு விழா பள்ளி நடந்தது. தாளாளர் சத்யன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதன், காரைக்குடி தேசிய மாணவர் படை பட்டாலியன் தலைமை அதிகாரி கர்னல் ரஜனீஷ் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். பள்ளியின் கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.

மழலையர்கள் கைகளில் பூக்கள் ததும்பும் மலர் நடனம், உடற்பயிற்சி நடனம், வானவில் தோரண நடனம், மேற்கத்திய நடனம் ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்தன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிர்வாக அதிகாரி பாலாஜி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com