search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.எஸ்.ஆர்.கல்லூரி பட்டமளிப்பு விழா
    X

    விழாவில் ஒரு மாணவிக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பட்டம் வழங்கினார். அருகில் பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி உள்ளார்.

    பி.எஸ்.ஆர்.கல்லூரி பட்டமளிப்பு விழா

    • சிவகாசி பி.எஸ்.ஆர்.கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 540 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.
    • ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறக்க வேண்டும் என்றார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார்.

    இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி கல்வி சார் இயக்குநர் கோபால்சாமி வரவேற்றார். முதல்வர் சுந்தரராஜ் விழாவை தொடங்கி வைத்தார். டீன் மாரிச்சாமி வரவேற்றார்.

    பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 540 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஒவ்வொரு துறையிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு, பதக்கம், சான்றி தழ்களையும் வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராமத்தில் இருந்து ஏழை, எளிய மாணவ, மாணவிகள், பயன்பெறும் வகையில் மூத்த தகப்பனாராக இருந்து தாளாளர் சோலைசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி கலை அறிவியல் துறையிலும் சிறந்து விளங்க முடியும். மனதிற்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகமாக மாறி வருவதால் மாணவ-மாணவிகள் அதை கவனத்தில் கொண்டு சிறப்பாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

    அரசு வேலை மட்டுமின்றி தொழில் முனைவோ ராகவும் மாணவர்கள் மாற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும்.

    நகரம் மற்றும் கிராமத்தில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு வித்தியாசம் உள்ளது. நகரத்தில் படிக்கும் மாணவ- மாணவிகள் பெற்றோர்கள் படித்தவர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள்.

    அவர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பட்டம் பெறுவதை தமிழக அரசின் சார்பில் பாராட்டுகிறேன். கல்லூரி படிப்புடன் நிறுத்தி விடாமல் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று அதிலும் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை புரிந்து வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், சாத்தூர் கடற்கரை ராஜ், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ண குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி நிர்வாகத்தினர் ஒருங்கி ணைப்பாளர்கள் சிவகுமார், பிரேம்குமார், ஜெயபாலன் மற்றும் பேராசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×