மக்களுக்காக போராடக்கூடிய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி -செந்தில்நாதன் எம்.எல்.ஏ.

மக்களுக்காக போராடக்கூடிய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார். அ.தி.மு.க. ஆட்சியை அமர வைப்பதற்காக போராடக்கூடிய ஒரே ஒப்பற்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
அ.தி.மு.க.  ஆலோசனை கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார். அருகில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உள்பட பலர் உள்ளனர். 
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார். அருகில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உள்பட பலர் உள்ளனர். 
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வின் பொன்விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நிர்வாகி களுக்கு ஆலோசனை வழங்கி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க. அரசை அகற்றிவிட்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமர வைப்பதற்காக போராடக்கூடிய ஒரே ஒப்பற்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆளுங்கட்சியை எதிர்த்து பல போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தவும், பல திட்டங்களை வகுக்கவும் ஒரு வலுவான தலைவராக அவர் திகழ்கிறார். அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

மக்களுக்காக போராடக்கூடிய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரின் வழியிலே அவரின் மேலான ஆலோசனையை கேட்டு நாம் அனைவரும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் அமோகமாக வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமர செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகராஜன், குணசேகரன், நகர் செயலாளர் ராஜா, மெய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், ஸ்டிபன், சிவாஜி, பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், கோபி, சேவியர், ஸ்ரீதர், செல்வ மணி, பழனிச்சாமி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், சங்கர் ராமநாதன் உட்பட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com