லட்சுமி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா

காரைக்குடியில் லட்சுமி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
சாக்கோட்டை சேர்மன் சரண்யா செந்தில்நாதன் அன்னதானத்தை தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
சாக்கோட்டை சேர்மன் சரண்யா செந்தில்நாதன் அன்னதானத்தை தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
Published on

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி போக்குவரத்து நகரில் உள்ள லட்சுமி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிசேகம், ஆரா தனை நடைபெற்றது.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தரிசனம் செய்தார். ஒன்றிய கவுன்சி லர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதானத்தை சாக் கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, மாவட்ட அம்மா பேரவை ஊரவயல் ராமு, மாவட்ட மகளிரணி தலைவி சித்திராதேவி, நகர மகளி ரணி செயலாளர் சுலோச் சனா, ஒன்றிய கவுன்சிலர்கள் தேவி மீனாள், தமிழ்ச்செல்வி, நிர்வாகிகள் மகேந்திரன், நாகராஜன், வட்ட செய லாளர் சீனிவாசன், கபிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலையில் லட்சுமி விநாயகரின் வீதி உலா நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com