பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத்தலைவர் பாண்டித்துரை இல்ல திருமணம்

பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத்தலைவர் பாண்டித்துரை இல்ல திருமண விழா நடக்கிறது.நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் காரைக்குடி பி.எல்.பி பேலஸ் திருமண மகாலில் நடக்கிறது.
மணமக்கள் கார்த்திகேயன்-தாரணி.
மணமக்கள் கார்த்திகேயன்-தாரணி.
Published on

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் வேலங்குடி சோலைமலையான் வீட்டை சேர்ந்த சோ.கரு.துரைராஜ்-சுசீலா தம்பதியரின் இளைய மகனும், பாரதீய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணை தலைவர், தொழிலபதிபர் து.பாண்டித்துரையின் சகோதரருமான சோ.கரு.து.கார்த்திகேயன் மணமகனுக்கும், பள்ளத்தூர் கோடியான் வீடு கோ.வெ.சபாரெத்தினம்-சாந்தி தம்பதியரின் மகளுமான ச.தாரணி மணமகளுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.

இவர்களது திருமணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் காரைக்குடி பி.எல்.பி பேலஸ் திருமண மகாலில் நடக்கிறது. பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

இதில் முன்னாள் தேசிய செய லாளர் எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிரணி தலைவி வானதிசீனிவாசன், மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாநில பொதுச்செய லாளர்கள் அ.பி.முருகா னந்தம், ராம சீனிவாசன், எம்.முருகானந்தம், பொன்.வி.பாலகணபதி, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

திருமண விழாவில் மாநிலம் முழுவதும் இருந்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். திரும ணத்திற்கான ஏற்பாடுகளை து.பாண்டித்துரை, கோட்டையூர் பேரூராட்சி கவன்சிலர் பா.திவ்யா தம்பதியினர் மற்றும் பள்ளத்தூர் சபா ரெத்தினம்-சாந்தி தம்பதி யினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com