search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3-வது புதிய ஆயராக லூர்து ஆனந்தம் நியமனம்

    • மறைமாவட்ட 3-வது புதிய ஆயராக லூர்து ஆனந்தம் நியமனம் செய்துள்ளனர்.
    • 26-ந்தேதி இத்திரு நிலைப்பாட்டு நிகழ்வானது மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மறை மாவட்டத்தின் 3-வது புதிய ஆயராக லூர்து ஆனந்தம் வருகிற 26-ந்தேதி அன்று சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில் பொறுப்பேற்கிறார்.

    இவ்விழாவில் திருத் தந்தையின் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜிரல்லி முன்னிலை வகிக்கிறார். மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி புதிய ஆயரை திருநிலைப்படுத்துகிறார். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயரும் சிவகங்கை மறைமாவட்டத்தின் பரிபாலகரமான மேதகு ஆயர் ஸ்டீபன், சிவகங்கை மேனாள் ஆயர் சூசைமாணிக்கம், சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி மற்றும் பிற மறைமாவட்டங்களின் ஆயர்களும் இத்திருலை பாட்டு நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

    மேலும் பாண்டிச்சேரி கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், சென்னை சி.எஸ்.ஐ. மேனாள் பேராயர் தேவசகாயம் அமைச்சர் பெரியகருப்பன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மாநில சிறுபான்மை நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ், திருச்சி எம் எல் ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பு செய்கின்றனர்.

    26-ந்தேதி இத்திரு நிலைப்பாட்டு நிகழ்வானது மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த மாபெரும் திருநிலைப்பாட்டு நிகழ்வில் அனைவரும் பங்கேற்று சிறப்பு செய்ய சிவகங்கை கத்தோலிக்க மறைமாவட்டம் அழைப்பு விடுத்துள்ளது.

    Next Story
    ×