ஆண்டிபட்டியில் வரதட்சணை தர மறுத்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

கணவருடைய சகோதரர் அடிக்கடி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். புகாரின்பேரில் கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள குமணன்ெதாழு வெம்பூர் மேற்குதெருவை சேர்ந்த மணீஸ்வரன் மனைவி மேகலா(34). இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் வாய்பேச இயலாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் கணவர் மணீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து வரதட்சணை கேட்டு மேகலாவை கொடுமைப்படுத்தி வந்தனர்.

வரதட்சணை வாங்கி வராததால் அடித்து உதைத்து குழந்தைகளை தங்கள் வசம் வைத்துக்கொண்டனர். மேலும் மணீஸ்வரனின் சகோதரர் கோவிந்தசாமி அடிக்கடி மேகலாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மேகலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் மணீஸ்வரன், அவரது சகோதரர் கோவிந்தசாமி, தந்தை வேலுச்சாமி, தாய் எட்டியம்மாள், உறவினர்கள் மகேஸ்வரி, கவிதா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com