மழைநீருடன் கலந்து வந்த சாக்கடை நீரில் மூழ்கிய தருமபுரி பட்டுக்கூடு அங்காடி-ஆவின் பாலகம்

நகரின் பல பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.சாக்கடை கழிவு வெளி யேறி மழைநீருடன் கலந்து புகுந்ததால் அப்பகுதியில் இருந்தவர்கள் அவதிப்பட்டனர்.
மழைநீருடன் கலந்து வந்த சாக்கடை நீரில் மூழ்கிய தருமபுரி பட்டுக்கூடு அங்காடி-ஆவின் பாலகம் போன்றவற்றை படத்தில் காணலாம்.
மழைநீருடன் கலந்து வந்த சாக்கடை நீரில் மூழ்கிய தருமபுரி பட்டுக்கூடு அங்காடி-ஆவின் பாலகம் போன்றவற்றை படத்தில் காணலாம்.
Published on

தருமபுரி,

தருமபுரியில் நேற்று இரவு இடி,மின்னலுடன் கனமழை பெய்தது.இதனால் நகரின் பல பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தருமபுரியில் கடந்த சில தினங்களாக சாக்கடை கழிவுகளை அகற்றி வருகின்றனர்.மழையால் அந்த பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நகரின் முக்கிய சாலையான கிருஷ்ண கிரியில் இருந்துதருமபுரி வரும் சாலையில் உள்ள ஆவின் பாலகம், மற்றும் தருமபுரி பட்டுக்கூடு அங்காடி உள்ள பகுதி முழுவதுமாக நீரில் மிதந்தது. இப்பகுதியில் உள்ள சாக்கடைகள் தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவு வெளி யேறி மழைநீருடன் கலந்து புகுந்ததால் அப்பகுதியில் இருந்தவர்கள் அவதிப்பட்டனர். ஆயிரக்கணக்காக மக்கள் தினசரி வந்து செல்லும் இப்பகுதியில் சாக்கடை கழிவுநீருக்குள் அசூசையுடன் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com