செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு

செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில் கைதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு
Published on

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்கியமான இரண்டு துறைகள் அவரிடம் உள்ளதால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட ரீதியில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், இந்த பிரச்சினையை சட்டப்படி எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. மேலும், தொடர்ச்சியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com