போலி மது விற்பனையா? - மதுவிலக்கு போலீசார் புது உத்தரவு

புகாரளிக்க புதிய செல்போன் எண் அறிவிப்பு சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து புகாரளிக்க வேண்டுகோள்
போலி மது விற்பனையா? - மதுவிலக்கு போலீசார் புது உத்தரவு
Published on

கோவை,

கோவை மாநகர மதுவிலக்கு போலீசார் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகரில் கள்ளச்சாராயம், வெளிமாநில மதுபானம், போலி மது ஆகியவை விற்பனை செய்வது தெரிய வந்தால் பொதுமக்கள் உடனடியாக மதுவிலக்கு பிரிவு போலீசாரின் செல்போன் எண்ணுக்கு (9514220020) தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இதன்அடிப்படையில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இயலும்.

எனவே கோவை மாநகரில் சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து பொதுமக்கள் உடனடியாக மேற்கண்ட செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்க முன்வரவேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com