ஓய்வூதியம் உயர்த்தி வழங்க கோரிஅமைப்புசாரா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

16 நலவாரியங்களுக்கும் உயர்த்த வேண்டும். 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஓய்வூதியம் உயர்த்தி வழங்க கோரிஅமைப்புசாரா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

கோவை

கோவை மாவட்டத்தில் சி.ஐ.டி.யு.டன் இணைக்கப்பட்ட கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி தலைமை தாங்கினார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, 'கட்டுமானம் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் நல வாரியத்தில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள உதவி தொகைகளை மற்ற 16 நலவாரியங்களுக்கும் உயர்த்த வேண்டும். மாதம் தோறும் ஓய்வூதிய தொகையை முறையாக வழங்க வேண்டும். 5 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும். மாதம் தோறும் வழங்கப்படும் ஓய்வூதிய தொகையை ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.' என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com