என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீமானால் உயிருக்கு ஆபத்து: திருச்சி சூர்யா கோர்ட்டில் மனு
    X

    சீமானால் உயிருக்கு ஆபத்து: திருச்சி சூர்யா கோர்ட்டில் மனு

    • சீமான், சாட்டை துரைமுருகனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மனு.
    • தனக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க கோரிக்கை.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திருச்சி சூர்யா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

    மேலும் சாட்டை துரைமுருகன் என்பவரும் எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் என்று திருச்சி சூர்யா மனு அளித்துள்ளார்.

    திருச்சி சூர்யா அளித்த மனுவின் விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து மதுரை கிளை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    சீமான் குறித்து 15 ஆடியோக்கள் பதிவேற்றம் செய்ததால் பழிவாங்கும் நோக்கோடு செயல்படுவதாகவும் மனுவில் திருச்சி சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

    தி.மு.க. மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×