என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான தாவீது, டேனி செல்வன்.
சாத்தான்குளம் தொழிலாளி எரித்துக்கொலை:'தகாத வார்த்தைகளால் திட்டியதால் கொன்றோம்' - கைதான 2 வாலிபர்கள் வாக்குமூலம்
- சாத்தான்குளம்-நாசரேத் ரோட்டின் அருகே வசித்து வருபவர் கண்ணன் (வயது 55). தச்சு தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அங்குள்ள கரையடி கோவில்குளம் அருகே சுடுகாட்டு பகுதியில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்
- சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சை நகரத்தை சேர்ந்த டிரைவர் தாவீது (25), திசையன்விளையை சேர்ந்த டேனி செல்வன் (22) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம்-நாசரேத் ரோட்டின் அருகே வசித்து வருபவர் கண்ணன் (வயது 55). தச்சு தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அங்குள்ள கரையடி கோவில்குளம் அருகே சுடுகாட்டு பகுதியில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அவரை கொலை செய்து எரித்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் டேவிட், எபனேசர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடந்தது. இதுதொடர்பாக சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சை நகரத்தை சேர்ந்த டிரைவர் தாவீது (25), திசையன்விளையை சேர்ந்த டேனி செல்வன் (22) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரையடி கோவில்குளம் சுடுகாட்டில் மது அருந்தி கொண்டிருந்தோம். அப்போது மதுபோதையில் அங்கு வந்த கண்ணன் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நாங்கள் கண்ணன் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தோம். பின்னர் அடையாளங்களை மறைப்பதற்காக கண்ணனின் உடலை தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றோம் என்றனர். அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் 2 பேரையும் கைது செய்தனர்.






