என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த பள்ளி மாணவ-மாணவிகள்
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக்பள்ளி பிளஸ்-1 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
- ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் பிளஸ்-1 வகுப்பில் 100 சதவீத வெற்றி பெற்றுள்ளனர்.
- அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் நோபிள் ராஜ் பாராட்டினார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் 61 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அனைவரும் வெற்றிபெற்றனர்.
இது 100 சதவீத வெற்றி ஆகும். மாணவி ஆதி ஸ்ரீ துர்கா 600-க்கு 545 மதிப்பெண் பெற்று முதலிடமும், ஸ்ரீ குமரன் 531 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், ரீனா ஜெனிபர் 502 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளார்.
மேலும் 90 மதிப்பெண்களுக்கு மேல் தமிழ் பாடத்தில் 15 மாணவ, மாணவிகளும், ஆங்கில பாடத்தில் 4 மாணவ, மாணவிகளும், கணிதத்தில் ஒரு மாணவியும், கணக்கியலில் 2 மாணவர்களும், வணிகவியலில் 2 மாணவர்களும், கணித அறிவியலில் 2 மாணவ, மாணவிகளும், கணினி பயன்பாட்டில் 2 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களை பள்ளி தாளாளர் நோபிள் ராஜ் பாராட்டினார்.






