search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் மலைப்பகுதியில் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க சேலை வேலி
    X

    தோட்டங்களில் வன விலங்குகள் புகுவதை தடுக்க பல வண்ண சேலைகளால் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க சேலை வேலி

    • சோலார் வேலி அமைத்து போதிய அளவு பயன் தரவில்லை. மீண்டும் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது.
    • புதிய முயற்சியாக வயல் பகுதிகளையும், தோட்டங்களையும் பல வண்ண சேலைகளைக் கொண்டு வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் சுற்றுலாவே பிரதான தொழிலாக உள்ளது. இதனை சுற்றி மேல்மலையில் மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கீழ்மலையில் பெருமாள்மலை, அடுக்கம், பேத்துப்பாறை, பண்ணை க்காடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. உருளைக்கிழங்கு, முட்டை க்கோஸ், கேரட், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறி கள் இங்கு விளைவிக்கப்படு கின்றன. இப்பகுதியில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் பேக்கிங் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    வனப்பகுதியில் காட்டெ ருமை, காட்டுப்பன்றி, யானை, மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி இடம்பெயரும் போது விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இதனை தடுக்க முள் வேலி, சோலார் வேலி ஆகியவற்றை விவசாயிகள் அமைத்தனர். ஆனால் இந்த முயற்சி போதிய அளவு பயன் தரவில்லை. மீண்டும் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது.

    எனவே புதிய முயற்சியாக வயல் பகுதிகளையும், தோட்டங்களையும் பல வண்ண சேலைகளைக் கொண்டு வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இதன் மூலம் வன விலங்குகள் ஆட்கள் நடமாட்டம் இருப்ப தாக எண்ணி வருவதில்லை என விவசாயிகள் தெரி விக்கின்றனர்.

    இந்த பல வண்ண சேலை வேலிகள் மலைப்பகுதிகளில் டிரெண்டாகி வருகிறது. இதன் மூலம் வன விலங்குகள் வருவதை தடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×