search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்துக்குடி விலை சரிவால் விற்பனை அதிகரிப்பு
    X

    சாத்துக்குடி விலை சரிவால் விற்பனை அதிகரிப்பு

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தற்போது 100 டன் முதல் 150 டன் வரை சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு வருகிறது.
    • கடந்த ஆண்டு இதே நேரத்தில் மொத்த விற்பனையில் சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது.

    போரூர்:

    கோயம்பேடு, பழ மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு வருகிறது. அக்னி வெயில் நேற்றுடன் முடிந்தாலும் வெப்பத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதனால் சாத்துக்குடி பழங்கள் தேவை அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தற்போது 100 டன் முதல் 150 டன் வரை சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகரித்து உள்ளதால் சாத்துக்குடி விலை சரிந்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை ஆகிறது. அதேபோல் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சாத்துக்குடி மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, கடந்த ஆண்டு இதே நேரத்தில் மொத்த விற்பனையில் சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது விலை சரிவால் சாத்துக்குடி பழங்களின் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது என்றார்.

    Next Story
    ×