வேலைக்கு சென்ற வாலிபர் மாயம்

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே வேலைக்கு சென்ற வாலிபர் திடீரென்று மாயமானார்.
மாயமான செல்வகுமார்
மாயமான செல்வகுமார்
Published on

சேலம்:

சேலம் சீலநாயக்கன்பட்டி பணத்தான்காட்டை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி சின்னபொண்ணு. 

வேலைக்கு சென்றார்

இவர்களது மகன் செல்வகுமார் (வயது 34). இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ந்தேதி வேலைக்கு செல்வதாக   பெற்றோரிடம் கூறி விட்டு வீட்டை விட்டு சென்றார்.  

அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மாயமாகி உள்ளது தெரியவந்தது.

இது குறித்து அவருடைய தாய் சின்னபொண்ணு அன்னதானபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான  செல்வகுமார் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com