

அன்னதானப்பட்டி
அன்னதானப்பட்டி: சேலம் டவுன் முகமது புறா பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் ( வயது 38). இவர் கிச்சிப்பாளையம் மெயின் ரோட்டில் பிரியாணி கடையில் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் மர்ம நபர்கள் சூறையாடி தப்பி ஓடி விட்டனர்.
இதேபோல் சேலம் கிச்சிப்பாளையம் ஆசாத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் ( வயது 46). ஆட்டோ டிரைவர். இவரை தாக்கி மர்ம நபர்கள் பணத்தை பறித்து சென்றனர்.
இதுதொடர்பாக கிச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து எஸ்.எம்.சி. காலனி பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் ( வயது 22), அவரது கூட்டாளிகளான வேலு (19), மற்றும் 18 வயதுடைய சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள அருணாசலம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.