தொழிலாளிக்கு கத்திக்குத்து

சேலம் சூரமங்கலத்தில் தொழிலாளிக்கு கத்தி குத்து விழுந்தது.
.
.
Published on

சேலம்:

சேலம் சூரமங்கலம் ராம கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது31). இவரது உறவினர் கண்ணன். சம்பவத்தன்று கண்ணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

 அப்போது சிவா கண்ணனை தாக்க முயன்றார். உடனே சீனிவாசன் அவரைத் தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவா, சீனிவாசனை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் காயமடைந்த சீனிவாசன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

இதுபற்றி சூரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com