மேச்சேரி அருகே இளம்பெண் தற்கொலை

மேச்சேரி அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
.
.
Published on

மேச்சேரி:

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 28), மேச்சேரி அருகே உள்ள வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் இந்து (24). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கார்த்தியும், இந்துவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 4 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பதகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் அவர் தனது கணவருடன் கோபித்துக்கொண்டு, மேச்சேரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால், மேட்டூர் உதவி கலெக்டர் விசாரணையும் நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com