மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சாம்பல் அடைப்பு ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
.
.
Published on

மேட்டூர்:

மேட்டூரில் நான்கு அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் தினசரி 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பழைய அனல் மின் நிலையம் உள்ளது.

 இதன் அருகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையம் உள்ளது. இவைகள் மூலமாக தினசரி மொத்தம் 1, 440 மெகாவாட் மின் உற்பத்தி எடுக்க படும்.

இதில் நேற்று இரவு 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் ஈ. எஸ்.பி.யில் சாம்பல் அடைப்பு ஏற்பட்டது. இதனால் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 

இதனை சரி செய்யும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com