சேலத்தில் பொதுமக்களிடம் தகராறு செய்தவர் கைது

சேலம் சந்தைப்பேட்டையில் பொதுமக்களிடம் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டார்
.
.
Published on

அன்னதானப்பட்டி:

சேலம்  அன்னதானப் பட்டி  போலீசார்   சந்தைப் பேட்டை,  அன்னதானப்பட்டி  பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளின் முன்  தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது  அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்  கடையில் மது வாங்கி அருந்தி விட்டு சந்தைப்பேட்டை சுடுகாடு  பகுதியில் நின்று கொண்டு  பொது இடங்களில் மக்களிடம் தகராறு செய்த  சேலம் குகை நல்லாயி தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 56)  என்பவரை போலீசார்  கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com