

ஆத்தூர்:
ஆத்தூர் நகராட்சி 18-வது வார்டு பாரதியார் தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). கூலித்தொழிலாளியான இவரது கூரை வீடு நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீயில் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகி சேதம் அடைந்தன. இது குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இது பற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் நகராட்சி தலைவர் நிர்மலா பபிதா, அனைத்து வணிகர் சங்க தலைவர் ரவிசங்கர் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, மளிகைப்பொருட்கள், காய்கறிகள், பாய், தலையணை போன்ற நிவாரண பொருட்களை வழங்கினர்.