நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

வாழப்பாடி அருகே அனுமதி இல்லாமல் ஒருவர் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
.
.
Published on

வாழப்பாடி:

வாழப்பாடியை அடுத்த குறிச்சி ரங்கனூர் பகுதியில் அனுமதி இல்லாமல் ஒருவர் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று ரங்கனூர் கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது விறகு கட்டைகளுக்கு இடையே பாண்டியன் (வயது 29) என்பவர் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே வாழப்பாடி போலீசார் பாண்டியனை கைது செய்ததுடன், நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com