நாளை பிளஸ்-2 கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட 9 பாடங்களுக்கு தேர்வு

சேலம், நாமக்கல் மாவட்டங்களில், நாளை பிளஸ்-2 கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட 9 பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளன.
.
.
Published on

சேலம்:

தமிழகத்தில் கடந்த (5-ந்தேதி) வியாழக்கிழமை  பிளஸ்-2 பொதுத்தேர்வு  தொடங்கியது. 

சேலம்  மாவட்டத்தில் 154 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 82 மையங்களிலும்  நடைபெற்று வருகின்றன. நேற்று  (9-ந்தேதி) திங்கட்கிழமை ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடைெபற்றது. 

இன்று தேர்வு கிடையாது.  நாளை (11-ந்தேதி) புதன்கிழமை கம்ப்யூட்டர் சயின்ஸ், இந்திய கலாச்சாரம், கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்,  பயோ- கெமஸ்ட்ரி, அட்வான்ஸ் தமிழ்,  வீட்டு அறிவியல்,  அரசியல் அறிவியல், புள்ளியியல்  உள்ளிட்ட 9 பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளன.

இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்   காலை 10 மணி அளவில் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும்.  தொடர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1.15 மணி அளவில் தேர்வு நிறைவடையும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com