தீக்குளித்து முதியவர் தற்கொலை

முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
.
.
Published on

சேலம்:

சேலம் சீலநாயக்கன்பட்டி எஸ்.கே. நகரை சேர்ந்தவர் ராமநாதன்(வயது89). இவர் அப்பகுதியில் மாடி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவரது மகன் வெங்கடேசன் (59)  தன் மனைவி இறந்துவிட்ட நிலையில் தரை தளத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இன்று அதிகாலை முதியவர் ராமநாதன் தனது வீட்டிற்குள் டீசலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மாடியில் இருந்து தீ புகை பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் மகன் வெங்கடேசன் ஆகியோர் மாடிக்குச் சென்றனர். அங்கு கதவு  உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.  

கதவை உடைத்து பார்த்தபோது அங்கு கருகிய நிலையில் ராமநாதன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள்  அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முதியவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரணை நடத்தினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com