நிலத்தகராறில் மோதல்-4 பேர் மீது வழக்கு

மேச்சேரி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
.
.
Published on

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள பொறையான் கரடு பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன் மனைவி முத்தம்மை. இவர் சின்னப்பையனின் முதல் மனைவி ஆவார். 

இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் இடையே  சொத்து தகராறு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2-வது  மனைவியின் மகன் செல்வராஜ் வழக்கு நடைபெற்று வரும் விவசாய நிலத்தில் விவசாய பணியினை மேற்கொண்டதாக தெரிகிறது. இதனைக்கண்ட முத்தம்மை இதுபற்றி கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 2-வது மனைவியின் மகன் செல்வராஜ், அவரது  மனைவி அஞ்சலை, செல்வராஜின் மகன் கேசவன், மற்றும் கலையரசன் ஆகிய 4 பேரும் சேர்ந்து முத்தம்மையை தாக்கினார்கள். 

இதில் படுகாயமடைந்த முத்தம்மை மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த தகவலின்பேரில் மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி செல்வராஜ் ,அஞ்சலை ,கேசவன், கலையரசன் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com